Monday, 15 May 2017

நடத்துநர் உரிமம் வைத்துள்ளவர்கள் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணி

நடத்துநர் உரிமம் வைத்துள்ளவர்கள், உரிய சான்றிதழுடன் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையை அணுகினால் தாற்காலிக அடிப்படையில் பணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளதால் தமிழகம் முழுவதும் பேருந்து போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நிலைமையை சமாளிக்க பள்ளி பேருந்து ஓட்டுநர்களை, தாற்காலிகமாக ஓட்டுநர் பணிக்குப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர். ஆனால் நடத்துநர் பணிக்கு ஆள்கள் இல்லை. இதனால் தகுதிவாய்ந்த நபர்கள் போக்குவரத்துக்கழக பணிமனையை அணுகினால் தாற்காலிக அடிப்படையில் பணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் தெரிவித்தது, அரசு போக்குவரத்துக் கழகத்தில் தாற்காலிக அடிப்படையில் பணியாற்ற நடத்துநர்கள் உடனடியாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.

 10-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற, நடத்துநர் உரிமத்தை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காகக் காத்திருக்கும் நபர்கள், நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், பள்ளிபாளையம் ஆகிய இடங்களில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையை திங்கள்கிழமை காலை நேரில் அணுகலாம். தகுதியான நபர்கள் உடனடியாகத் தேர்வு செய்யப்படுவர். இந்தப் பணி முற்றுலும் தாற்காலிமானது என்றார்.
-தினமணி
DOWNLOAD JOB UPDATE APP

CLICK HERE : Download


No comments:

Post a Comment