Saturday, 13 May 2017

தமிழக அரசில் சுற்றுலா துறையில் வேலை

தமிழக அரசில் நிரப்பப்பட உள்ள சுற்றுலா அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணி: Tourist Officer - 05
தகுதி: Travel and Tourism துறையில் முதுகலை பட்டம் அல்லது ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் மற்றும் சுற்றுலாத்துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் தமிழ்மொழி நன்கு தெரிந்திருக்க வேண்டும். கணினித் துறையில் சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.06.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 19.08.2017
மேலும் வயதுவரம்பு சலுகை, கட்டணம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2017_11_not_eng_tourist_officer_TNGS.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment